×

இந்த மாவட்டத்தை சேர்ந்தவரா நீங்க..? அப்போ குடையை எடுத்துட்டு போங்க..!!

 

மத்திய கிழக்கு வங்கக்கடல் முதல், தென் கிழக்கு அரபிக்கடல் வரை, தென்மேற்கு வங்கக்கடல், தமிழக தென்மாவட்டங்கள், மன்னார் வளைகுடா வழியாக, வளி மண்டலத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில், இன்று முதல் மே, 29 வரை, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 41 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது.