×

இந்த 5 ராசியினரா நீங்கள்..? அப்போ அதிர்ஷ்டம் உங்க பக்கம் தான்... எண்ணற்ற நற்பலன்களை கொண்டு வரும் பஞ்ச மஹா புருஷ யோகம்!

 

பஞ்சபூத கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகிய ஐந்து கிரகங்களாலும் கிடைக்கும் யோகங்களே பஞ்ச மகா புருஷயோகங்கள் என அழைக்கப்படுகின்றன.

''ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை படித்தவர், பாமரர், பணக்காரர், ஏழை என்பதெல்லாம் கிடையாது. ஜாதகத்தின் கட்டங்கள் என்ன சொல்கின்றதோ அதுவே ஜோதிட சாஸ்திரத்தின் சட்டம். ஜாதகத்தில் பல வகையான யோகங்கள் இருக்கின்றன. இவற்றில் பஞ்ச மகா புருஷ யோகங்கள் என்றால் என்ன, அதன் பலன் யாருக்குக் கிடைக்கும் என்பது பற்றி பார்ப்போம்.


நவகிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு, கேதுக்கள் மற்றும் ஒளி கிரகங்களான சூரிய, சந்திரர்களைத் தவிர்த்து, பஞ்சபூத கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகிய ஐந்து கிரகங்களாலும் கிடைக்கும் யோகங்களே பஞ்ச மகா புருஷயோகங்கள் என அழைக்கப்படுகின்றன.


குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் ஒரு ஜாதகத்தில் லக்னத்துக்குக் கேந்திரங்களான 1, 4, 7 மற்றும் 10 ஆகிய இடங்களில் அமர்ந்து ஆட்சியாகவோ உச்சபலமாகவோ இருக்கும் போது இந்த யோகங்கள் உருவாகின்றன. 

ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவிழந்த நிலையில், அவருடைய ஜாதகத்தை, சந்திரன் நிற்கும் ராசியின் மூலம் பார்க்கவேண்டும். அப்போது சந்திரனுக்குக் கேந்திரங்களில் அதாவது சந்திரன் இருக்கும் ராசியிலிருந்து 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் மேலே குறிப்பிட்ட கிரகங்கள் ஆட்சி அல்லது உச்சம் பெற்றுக் காணப்பட்டால் பஞ்சமகா யோகங்கள் பலனளிக்கும்.

குரு, சுக்கிரன், புதன் ஆகிய இயற்கைச் சுபகிரகங்களால் அமையப் பெறும் ஹம்ச, மாளவ்ய மற்றும் பத்ர யோகங்கள் ஒரு மனிதனின் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன்  அதிர்ஷ்டத்தையும் தந்து, பூமியில் மிகவும் பாக்கியவான் எனப் பெயரெடுக்கச் செய்யும். பாபக் கிரகங்களான செவ்வாய், சனி தரும் யோகங்கள் அப்படிப்பட்டவையல்ல. உண்மையில் பஞ்சமகா புருஷ யோகங்கள் என்பவை ஒரு மனிதனை, அவர் இருக்கும் துறையில் முதன்மையானவனாக, மகா புருஷனாக்கும் யோகங்கள் மட்டும்தான். இவை ராஜயோகங்கள் அல்ல. 

ஒரு மனிதனை அரசாள வைக்கும் அல்லது அரசனாக்கும் தகுதி படைத்தவை, ஜோதிடத்தின் மூல கிரகங்களும், ஒளி கிரகங்களுமான சூரிய, சந்திரர்கள் மட்டும்தான்.


ஒரு கிரகம் முறையான நீசபங்கம் அடைவதைக்கூட நீச பங்க ராஜயோகம் என்று தனியாக அடையாளப்படுத்திக் காட்டிய நமது ஞானிகள், இந்த யோகங்களை மகாபுருஷ யோகங்கள், அதாவது ஒருவனை மனிதர்களில் முதன்மையானவனாக்கும் யோகம் என்றுதான் அடையாளப்படுத்தினார்களே தவிர இவற்றை ராஜயோக வரிசையில் வைக்கவில்லை.


இந்த ஐந்து கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திரங்களில் வலுப்பெறும்போது தனது காரகத்துவங்களின் வாயிலாகவும், ஆதிபத்தியங்களின் வழியாகவும் மட்டுமே ஒரு மனிதனுக்கு உயர்வுகளைத் தரும். 


அதேநேரத்தில் ஒருவரின் ஜாதகத்தில் ராஜ கிரகங்களான சூரியனும், சந்திரனும் பலம் பெற்றிருந்து, குறிப்பிட்டுச் சொன்ன ராஜயோகங்கள் உண்டாகியிருக்கும் நிலையில், அந்த ஜாதகரை அரசனாக, அரசில் அங்கம் வகிக்கச் செய்ய, இந்த பஞ்சமகா புருஷ யோகங்கள் பெரிதும் துணை நிற்கும்.


பெருமை வாய்ந்த இந்த யோகங்களைத் தரும் நிலையில் இருக்கும் ஐந்து பஞ்சபூத கிரகங்களும் ஒரு ஜாதகத்தில் லக்ன பாபர்கள் மற்றும் பகை கிரகங்களின் இணைவையோ, தொடர்பையோ பார்வையையோ பெற்றிருக்கக் கூடாது. அப்படி இருந்தால் யோகம் பலவீனமடையும். குறிப்பாக இருள் கிரகங்களான ராகு, கேதுக்களுடன் இணைந்து கிரகணம் அடைவதோ, சூரியனுடன் மிக நெருங்கி அஸ்தங்கம் பெறுவதோ யோகத்தைப் பங்கமுறச் செய்யும்'.

5 ராசியினருக்கு எண்ணற்ற நற்பலன்களை கொண்டு வரும் பஞ்ச மஹா புருஷ யோகம்!

ரிஷபம்

​ரிஷப ராசி கொண்டவர்களுக்கு வாழ்க்கை லட்சியங்கள் நிறைவேறும் ஒரு சிறப்பு தினமாக இன்று இருக்கும். குறிப்பாக தொழில் வாழ்க்கையில் ஏற்றம் காணும் ஒரு தினமாக இருக்கும். ஏற்கனவே செய்து வரும் தொழிலை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டுச் செல்லும் வழிகள் பிறக்கும். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான ஒரு சூழ்நிலை உண்டாகும்.

சக ஊழியர்களிடம் இருந்து உங்களுக்கு தேவையான ஆதரவும், நல்லுறவை பேணும் வாய்ப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் கிடைக்கும் வருமானத்தை இருமடங்காக அதிகரிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் நிதி ஆதாயமும் கிடைக்கும். முன்னர் செய்த முதலீடுகள் வழியே உங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்!


சிம்மம்

சிம்ம ராசி கொண்டவர்களுக்கு செல்வாக்கும், மரியாதையும் அதிகரிக்கும் ஒரு தினமாக இன்று இருக்கும். உங்கள் தந்ததை மற்றும் தாயின் உறவினர்கள் வழியே எதிர்பார்த்த உதவி ஒன்று கிடைக்கும். வீட்டில் இருக்கும் இளையவர்களின் திருமண காரியங்கள் கைகூடும். விரைவில் திருமணத்தை முடிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். பொருளாதார நிலையில் காணப்படும் மாற்றம், உங்கள் விருப்பமான பொருட்களை வாங்கி குவிக்க வழி வகுக்கும்.

புதிய வாகனம், வீடு வாங்கும் யோகமும் காணப்படுகிறது. நீங்கள் கடனாக கொடுத்த பணம், நீங்கள் கேட்காமலேயே உங்களை தேடி வரும். எதிர்காலம் தொடர்பான குழப்பங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க விரும்பும் நபர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவி, கடன் உதவி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு உங்கள் தந்தையின் ஆதரவு உதவியாக இருக்கும்.


கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் அதிர்ஷ்டம் நிறைந்த ஒரு தினமாக இருக்கும். குறிப்பாக, பண விஷயத்தில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். செய்யும் தொழிலில் எதிர்பார்த்ததை விட அதிகம் லாபம் கிடைக்கும். பாதியில் நின்ற பணிகள் விரைவில் முடிவடையும், நீண்ட நாட்களாக செய்ய விரும்பி காத்திருந்த விஷயங்கள் வெற்றிகரமாக முடிவுக்கு வரும்.

தொழில் வாழ்க்கையில் அனுபவம் மிக்க ஒருவரின் வழிகாட்டுதல் உங்கள் வெற்றிக்கு உதவியாக இருக்கும். தொழில் விரிவாக்கத்திற்கு வங்கி கடன் உதவிகள் கிடைக்கும்; உறவினர்கள் வழி ஆதரவும் கிடைக்கும். சந்தைப்படுத்துதல் துறையில் இருக்கும் நபர்கள், தங்கள் தொழிலை அடுத்தடுத்த கட்டத்திற்கு விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு பெறுவீர்கள்.

காதல் விஷயங்கள் வெற்றியில் முடியும்; குறிப்பாக, மாற்று மதத்தில் காதல் செய்து வரும் நபர்கள், பெற்றோர் அனுமதியுடன் விரைவில் திருமணத்தை முடிக்கும் வாய்ப்பு காணப்படுகிறது!


துலாம்

​துலாம் ராசி கொண்டவர்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும் ஒரு சிறப்பு தினமாக இன்று இருக்கும். அரசு பணிக்காக போட்டி தேர்வு எழுதி காத்திருக்கும் நபர்கள், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தங்கள் திறமைக்கு ஏற்ற பணி வாங்கும் வாய்ப்பு காணப்படுகிறது. பணியிடத்தில் முகம் தெரியாத ஒரு நபரிடம் இருந்து உங்களுக்கு வேண்டிய ஆதரவு கிடைக்கும்.

உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். நண்பர்களுக்கு கடனாக அளித்த பணத்தை, திரும்ப பெறும் வாய்ப்பு காணப்படுகிறது. அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்க, தொழில் வாழ்க்கையில் எடுக்கும் சிறு முயற்சிகளும் எதிர்பார்த்த நற்பலனை அளிக்கும்.

குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதலருடன் போதுமான நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடும் வாய்ப்புகளும் கிடைக்கும்!


மகரம்!

மகர ராசியினருக்கு பொதுவாக திங்கட்கிழமை சிறப்பு மிக்க ஒரு தினமாக இருக்கும். இந்நிலையில் இன்று வழக்கத்திற்கு அதிகமாகவே பலன்கள் கிடைக்கும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட போட்டிகள் குறையும், வெற்றிகள் குவியும். பணி வாழ்கையில் காணப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும், உங்கள் தொழிலை அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும்.

பணி தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த பணி கிடைக்கும். அரசு பணி எதிர்பார்த்து காத்திருந்த நபர்களுக்கு, அவர்களின் எதிர்பார்ப்பின் படி ஒரு நல்ல பணியும் கிடைக்கும். கலைத்துறையில் சாதிக்க விரும்பும் நபர்களுக்கு அது தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் வெளியூர் பயணங்கள், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் காணப்படுகிறது!