அதிமுகவில் இருந்து தவெகவிற்கு தாவியவர்கள் அதிருப்தி?
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் அதிருப்தியில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், என்.ஆர். சிவபதி ஆகியோருடன் முன்னாள் எம்பி இளவரசன் மற்றும் சுந்தர்ராஜ், ராஜமுத்து, ராஜவர்மன், பன்னீர்செல்வம், முருகன், என். சிவா போன்ற முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ். வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன் போன்ற முக்கிய முகங்களும் தவெகவிற்கு தாவினர். மொத்தமாக 8 முன்னாள் அமைச்சர்கள், 1 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் தவெகவில் இணைந்தனர். விஜயபாஸ்கருக்கு புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் அதிருப்தியில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியில் இணைந்தபோது அளித்த வாக்குறுதியின்படி பதவி வழங்கப்படவில்லை என்றும், முதலமைச்சரிடம் கேட்டு சொல்கிறோம் என்றே பதில் வருவதாகவும் முன்னாள் அமைச்சர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.