"மக்கள் என்ன பிச்சைக்காரர்களா?" – திராவிட கட்சிகளை தொடர்ந்து விஜய்யின் வாக்குறுதியையும் விளாசும் சீமான்..!
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருக்கும் தவெக தலைவர் இம்முறை 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் விஜய் பல வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார். சமீபத்தில், சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற விழாவில் தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை புத்தகமாக அவர் வெளியிட்டார்.
அதில் ஏழை பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் ஒரு பட்டுப் புடவை கொடுக்கப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதியும் இடம்பெற்றிருந்தது.இந்நிலையில், தேர்தல் பரப்புரையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தாலிக்கு தங்கம் என்பதை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்..
‘எதுவும் இலவசம் கிடையாது.. தாலிக்கு தங்கம் கண்டிப்பாக தரமாட்டேன்... காலம் முழுவதும் உன்னுடன் வாழவரும் ஒரு பெண்ணுக்கு ஒரு பவுனில் தாலி கூட வாங்கி கட்ட முடியாது என்றால் உனக்கு கல்யாணம் தேவையில்லை.. அதுக்கு நீ செத்துப் போகலாம்’ என அதிரடியாக பேசியிருக்கிறார்..
திராவிட கட்சிகளின் இலவச அறிவிப்புகளை பல வருடங்களாக கடுமையாக எதிர்த்து வருகிறார் சீமான்.. மக்களுக்கு எந்த இலவசமும் கொடுக்க தேவையில்லை.. அவர்கல் என்ன பிச்சைக்காரர்களா?.. கையேந்தி இலவசங்களை வாங்க முடியாத அளவுக்கு மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதுதான் ஒரு நல்ல அரசு’ என தொடர்ந்து சீமான் பேசி வருவது குறிப்பிடத்தக்கது..