×

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய ஆற்காடு பஞ்சாங்கம் : யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது; கூட்டணி ஆட்சிதான்..!

 

சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்போது, பராபவ ஆண்டு ஆற்காடு பஞ்சாங்கத்தில்  குறிப்பிடப்பட்டுள்ள ஒரு தகவல் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

அதில், இந்த ஆண்டு நடைபெற உள்ள பல்வேறு விஷயங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் அரசியல் குறித்து ஒரு குறிப்பு உள்ளது. தற்போது, தமிழகத்தில் பல்வேறு கருத்துகணிப்புகள், ஒரு கட்சி பெரும்பான்மை பெற்று ஜெயிக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில், பஞ்சாங்கத்தில், 'உலகலாவிய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும். 

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளில், எதிர்பார்த்த வெற்றி யாருக்கும் கிடைக்காது. கூட்டணி ஆட்சி அமையும்' என கூறப்பட்டுள்ளது. அதாவது,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் மக்கள் எதிர்பார்த்த முழுமையான வெற்றி கிடைக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு கட்சியின் தனிப்பெரும் ஆட்சி முடிவுக்கு வந்து, பல்வேறு கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் ‘கூட்டணி ஆட்சி’   அமைவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக பஞ்சாங்கம் கூறுகிறது. இந்தக் கணிப்பு அரசியல் வட்டாரங்களில் விவாதங்களைக் கிளப்பியுள்ள நிலையில், ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சித் தொண்டர்களிடையே இது கலக்கத்தையும் எதிர்பார்ப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ள இந்தக் கணிப்புகள் ஜெயிக்குமா அல்லது பொய்யாகுமா என்ற கேள்விக்கான விடையைப் பெற, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அடுத்த மாதம் 4-ம் தேதி வரை நாம் காத்திருப்போம்.