அரசகுமார் மோசடி - புகாரளிக்க அழைப்பு
பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் அரசகுமாரின் மோசடி குறித்து புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்றுத் தர லட்சக்கணக்கில் லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் புகார்களும் அளிக்கப்பட்டன. புகார்களில் முறைகேடு, பணமோசடி சம்பவங்கள் அனைத்தும் கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட ரு.100 கோடி மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந் நிலையில், இந்த விவகாரத்தில் பி.டி. அரசகுமார் மற்றும் அவருக்கு உதவியதாக முத்துக்குமார் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
இந்நிலையில் தனியார் பள்ளிகளிடம் நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அரசு அனுமதிகளை பெற்று தருவதாக கூறி பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் அரசகுமாரின் மோசடி குறித்து புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவித்துள்ளனர். அரசக்குமார் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.