×

அரசகுமார் ரூ.200 கோடி வரை மோசடி?

 

தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாகக்கூறி ரூ.200 கோடி வரை பணம் மோசடி என தகவல் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்றுத் தர லட்சக்கணக்கில் லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் புகார்களும் அளிக்கப்பட்டன. புகார்களில் முறைகேடு, பணமோசடி சம்பவங்கள் அனைத்தும் கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட ரு.100 கோடி மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந் நிலையில், இந்த விவகாரத்தில் பி.டி. அரசகுமார் மற்றும் அவருக்கு உதவியதாக முத்துக்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.

இந்நிலையில் திமுக நிர்வாகியும், தனியார் பள்ளி சங்கத் தலைவருமான பி.டி.அரசகுமார் தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாகக்கூறி ரூ.200 கோடி வரை பணம் மோசடி என தகவல் வெளியாகியுள்ளது. பணம் கொடுத்து ஏமாந்த பள்ளி நிர்வாகிகளிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்திவருகின்றனர். தனியார் பள்ளிகளிடம் ரூ.25 லட்சம் முதல் சுமார் ரூ.3 கோடி வரை மோசடி செய்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பணம் கொடுத்து ஏமாந்த பள்ளி நிர்வாகிகளிடம் போலீஸ் வாக்குமூலம் பெறுகிறது. 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் தனித்தனியாக போலீசார் வாக்குமூலம் பெற்றுவருகின்றனர். மேலும் கைதான அரசகுமாரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறை முடிவு செய்துள்ளது.