×

"என் இசையை தென்னிந்தியாவின் மிகத் தொலைதூர கிராமங்களுக்கு கொண்டு சென்றதற்கு நன்றி”- பாரதிராஜா குறித்து ரகுமான் உருக்கம்

 

என் இசையை தென்னிந்தியாவின் மிகத் தொலைதூர கிராமங்களுக்குக் கொண்டு சென்றதற்கும், அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கும் பாரதிராஜாவுக்கு நன்றி என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாகக் கடுமையான உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, இன்று (ஜூன் 10) அதிகாலையில் காலமானார்.  இந்தத் திடீர் மறைவுச் செய்தி திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாரதிராஜாவின் மறைவையடுத்து பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் கிராமங்களின் காதலையும், உயிரோட்டத்தையும் உங்களைப் போல யாரும் திரையில் காட்டவில்லை. உங்கள் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டி பலருக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும். என் இசையை தென்னிந்தியாவின் மிகத் தொலைதூர கிராமங்களுக்குக் கொண்டு சென்றதற்கும், அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை…

— A.R.Rahman (@arrahman) June 10, 2026


இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ் கிராமங்களின் காதலையும், உயிரோட்டத்தையும் உங்களைப் போல யாரும் திரையில் காட்டவில்லை. உங்கள் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டி பலருக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும். என் இசையை தென்னிந்தியாவின் மிகத் தொலைதூர கிராமங்களுக்குக் கொண்டு சென்றதற்கும், அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி. அமைதியாக இளைப்பாறுங்கள், பாரதிராஜா அவர்களே” எனக் குறிப்பிட்டுள்ளார்.