மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்..
Updated: May 23, 2023, 20:44 IST
மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
வளர்சிப்பணிகளை துரிதப்படுத்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை தமிழக அரசு நியமித்திருக்கிறது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த ஆர்.காந்தி, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக எஸ். ரகுபதியும், தேனி மாவட்ட பொறுப்பு அமைச்சராக ஐ.பெரியசாமியும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சராக மெய்யநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.