சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கு நாளை (13/07/2026) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கு நாளை (13/07/2026) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2026-27ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை www.tnayushselection.org தளத்தில் தொடங்குகிறது. ஆயுஷ் படிப்புகளுக்கு நாளை முதல் ஜூலை 31ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் ஆயுஷ் படிப்புகளுக்கு உள்ள 5 அரசுக் கல்லூரிகளில் 320 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 320 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 48 இடங்களும், 272 இடங்கள் மாநில அரசுக்கும் உள்ளன. 29 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,920 இடங்களில் 15% அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இளநிலை யோகா, இயற்கை மருத்துவப் படிப்புக்கும் நாளை முதல் விண்ணப்பம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.