ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் விரிவுபடுத்த ஆப்பிள் நிறுவனம் தீவிரம்!
Oct 16, 2025, 13:04 IST
ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியில் பெரும் பங்கை சீனாவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றவும், இந்தியாவில் உற்பத்தியை விரிவுபடுத்தவும் முயற்சித்து வருகிறது.
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்வதற்காக ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.இதில் குறிப்பிட்ட பகுதி செல்போனை அசெம்பிள் செய்வதற்கான இயந்திரங்கள் வாங்கவே செலவாகிறது.
ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்திடம் உள்ள இயந்திரங்களை வழங்கலாம் என முடிவு செய்தால், இந்திய வருமான வரிச் சட்டம் 1961ன் படி வெளிநாட்டு நிறுவனத்துக்குச் சொந்தமான உபகரணங்களை பயன்படுத்த வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில் வரி விதிப்பு சட்டத்தில் சாத்தியமான மாற்றங்கள்குறித்து விவாக்க மத்திய அரசுக்கு ஆப்பிள் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.