புது ஐபோன் வெளியிட்டதும் ஐபோன்17 விலையை உயர்த்திய ஆப்பிள்..!
ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் டுயோ அறிமுகத்தைத் தொடர்ந்து, பழைய மாடல்களின் விலையை இந்தியாவில் ஆப்பிள் உயர்த்தியுள்ளது.
ரேம் மற்றும் ஸ்டோரேஜ் தட்டுப்பாடே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஐபோன் 17 (256 ஜிபி) விலை ரூ.17,000 உயர்ந்து ரூ.99,900-ஆகவும், 512 ஜிபி மாடல் ரூ.1,24,900-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஐபோன் ஏர் ஆரம்ப விலை ரூ.1,49,900 ஆகவும், டாப் எண்ட் மாடல் ரூ.2,24,900 வரையிலும் உயர்த்தப்பட்டு ஆன்லைன் தளத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளின் அறிமுக நிகழ்ச்சி 'சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்' அமெரிக்காவின் குபெர்டினோவில் நடந்தது. இந்த நிகழ்வின் போது, மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான 'ஐபோன் டியோ' (iPhone Duo) அறிமுகம் செய்யப்பட்டது. இதனுடன், ஐபோன் 18 ப்ரோ (18 Pro), ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் (18 Pro Max), ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12 (Apple Watch Series 12), வாட்ச் அல்ட்ரா 4 (Apple Watch Ultra 4), ஏர்பாட்ஸ் 5 (AirPods 5) உள்ளிட்ட புதிய சாதனங்களையும் ஆப்பிள் அறிமுகப்படுத்தியது.
இந்திய ரூபாய் மதிப்பில் (ஐபோன் விலை), 18 Pro-வின் ஆரம்ப விலை ரூ.1,64,900 ஆகவும், 18 Pro Max-ன் ஆரம்ப விலை ரூ.1,79,900 ஆகவும், Duo-வின் ஆரம்ப விலை ரூ.2,99,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இரண்டு Pro மாடல்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 12-ம் தேதியும், உலகளாவிய விற்பனை செப்டம்பர் 18-ம் தேதியும் தொடங்க உள்ள நிலையில், மடிக்கக்கூடிய ஐபோனான Duo-வின் முன்பதிவு மட்டும் அக்டோபர் 16-ம் தேதியும், விற்பனை அக்டோபர் 23-ம் தேதியும் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவில் ஐபோன் 17, ஐபோன் 17e மற்றும் ஐபோன் ஏர் உள்ளிட்ட உள்ளிட்ட தனது பழைய ஐபோன் மாடல்களின் விலைகளையும் கணிசமாக உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
iPhone 17 (256GB): ரூ.82,900-ல் இருந்து தற்போது ரூ.99,900 ஆக உயர்ந்துள்ளது (ரூ.17,000 உயர்வு).
iPhone Air: ரூ.1,19,900-ல் இருந்து தற்போது ரூ.1,49,900 ஆக உயர்ந்துள்ளது (ரூ.30,000 உயர்வு).
iPhone 17e: ரூ.64,900-ல் இருந்து தற்போது ரூ.79,900 ஆக உயர்ந்துள்ளது (ரூ.15,000 உயர்வு)
iPhone 16: ரூ.69,900-ல் இருந்து தற்போது ரூ.89,900 ஆக உயர்ந்துள்ளது (ரூ.20,000 உயர்வு).