இதுதான் தூய சக்தி செய்யும் வேலையா?- அப்பாவு விமர்சனம்
சோபா நிறைய பணம் கொடுத்து எதிரணியில் இருந்த கட்சிகளையே விலைக்கு வாங்கிய நீங்கள் தூய சக்தியா CM Sir..?என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அப்பாவு தனது எக்ஸ் தளத்தில், “சட்டப்பேரவைத் தேர்தலில் பொய்யை மூலதனமாக கொண்டு பிரச்சாரம் செய்தும் பெரும்பான்மை கிடைக்காததால் #சோபா நிறைய பணம் கொடுத்து எதிரணியில் இருந்த கட்சிகளையே விலைக்கு வாங்கிய நீங்கள் தூய சக்தியா CM Sir..? கட்சிகளை வாங்கியும் பெரும்பான்மைக்கு பாதிப்பு வருமோ என்ற அச்சத்தால் பெட்டி பெட்டியாக பணம் கொடுத்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிய நீங்கள் #தூயசக்தியா CM Sir?
#ரீல்ஸ்களை காட்டி பொய்களை அவிழ்த்து விட்டு இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் எளிதில் வென்று விடலாம் என்ற உங்களது கனவை பொய்யாக்கும்விதமாக வேட்பாளர்களை ஊருக்குள் நுழைய விடாமல் மக்கள் விரட்டியடிப்பதைப் பார்த்து பதறி #மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் #100நாள் வேலைத்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் டிபன் பாக்ஸ் நிறைய வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறீர்களே இதுதான் தூய சக்தி செய்யும் வேலையா CM Sir..?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.