×

‘அப்பா’... ஓடிவந்து மு.க.ஸ்டாலினை நெகிழ வைத்த ஈழ மகள்

 

வாழ்வாதாரம் தேடி வந்த ஈழ மகளுக்கு, வீடு கட்டிக்கொடுத்து, வாழ்வுக்கு வழிகாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் நன்றி தெரிவித்து கைகுட்டை ஒன்றை பரிசாக வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள் விளையாட்டரங்கத்தில், தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தும் பல்வேறு முன்னோடி திட்டங்களின் சாதனைகள், பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு மேற்கொண்ட முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் நிகழ்ச்சியில், தையல் தொழில் செய்து வரும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர் செல்வி சாரா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் எம்பிராய்டரி செய்து தயாரித்த "அப்பா" என்ற எழுத்துடன் கூடிய கைக்குட்டையை வழங்கினார்.