×

பாஜகவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்...திருமாவின் பதில் 

 

யார் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளட்டும், அதனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எந்த வித நட்டமும் இல்லை, இலாபமும் இல்லை  என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார் .


இதுக்குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், யார் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளட்டும், அதனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எந்த வித நட்டமும் இல்லை, இலாபமும் இல்லை...

கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சில நபர்கள் பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வந்த வண்ணமாகவே உள்ளது, அவர்கள் அங்கு சென்றதால் விடுதலைச் சிறுத்தைகள் பலம் குறைந்து விட்டது என்பது பொருளல்ல, 

ஏற்கனவே செல்வபெருந்தகை,தடா.பெரியசாமி, திருவள்ளுவன், கலைகோட்டுதயம், தேவநாதன், உள்ளிட்ட ஏராளமானோர் இந்த இயக்கத்தை விட்டு வெளியேறினார்கள் அதனால் இந்த இயக்கம் பலவினமடைவிட்டதா? என்று கேட்டால் பதில் யாரிடமும் இருக்காது.