“தற்கொலை செய்யப்போகிறேன்... இதுக்கு காரணம் எருமை சாணி விஜய் பொண்டாட்டி தான்”- ரிசார்ட் வெப் சீரிஸ் நடிகை பரபரப்பு வீடியோ
ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளி்ரப்பாகும் ரிசார்ட் வெப் சீரிஸில் நடித்துவரும் நடிகை அனுராகா நம்பியார் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அனுராகா தனது இன்ஸ்டாகிராம் லைவில் கூறியிருப்பது, “கேரளாவில் ஒரு சின்ன கிராமத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் வந்த என்னை ஹீரோயின் வாய்ப்பு தருவதாக அழைத்து ரெசார்ட் வெப்சீரிஸில் ஸ்ரீநிதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தனர். ஒரு வருட அக்ரிமெண்ட் போட்டு வேறு எங்கும் வேலை செய்ய முடியாதபடி லாக் செய்தனர். கடந்த 4 மாதங்களாக ஷூட்டிங்கிற்கே பெரிதாக அழைக்காமல் ஏமாற்றி வருகின்றனர். நேற்று எனக்கு வலிப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். தற்போதுதான் டிஸ்சார்ஜ் ஆகி வந்தேன்.
என்னுடைய நண்பர் போன் செய்து தயாரிப்பு தரப்பிடம் பணம் கேட்ட நிலையில், அதற்கு எருமை சாணி விஜய் மற்றும் மனைவி நக்ஷத்திரா அசிங்கமாக பேசியுள்ளார். எனக்கு வலிப்பு வரவில்லை என்றால் நான் தற்கொலை செய்திருப்பேன். ஜியோ ஹாட்ஸ்டாரில் மற்ற டீம் எல்லாம் நடிக்க அழைத்த போதும் கூட குளோபல் வில்லேஜ் தயாரிப்பு நிறுவனம் என்னை நடிக்க அனுமதிக்காமல் தடுத்து விட்டனர். இதுக்கு ஜியோ ஹாட்ஸ்டார், குளோபல் வில்லேஜ் தயாரிப்பு நிறுவனம் பதில் சொல்லியே ஆக வேண்டும். நான் இந்த சினிமா இண்டஸ்ட்ரீயவிட்டே போய்விடுகிறேன். கடந்த 2, 3 வாரங்களாக எனக்கு வேலையும் இல்லை, வருமானமும் இல்லை, நான் பசியால் வாடி வதங்கி வருகிறேன். என்னை வேறு வேலைக்கும் போகவிடாமல் தடுக்கின்றனர். இதுக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் தற்கொலை பண்ணிக்குவேன்” எனக் கூறியுள்ளார்.