தமிழகத்தில் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை..!!
மணல் குவாரி முறைகேடு வழக்கின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு வரை கூடுதலாக ஆற்று மணல் அள்ளியதன் மூலம் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
28 மணல் குவாரிகள் மூலம் ரூ.4,730 கோடி ஊழல் என 2024 ஜூன் மாதம் டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது.
அமலாக்கதுறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் புதிதாக வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் காலை முதல் சோதனை நடந்து வருகிறது.
திண்டுக்கலில் மணல் குவாரி உரிமையாளர் ரத்தினம் என்பவர் வீட்டில் சோதனை நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் பகுதியில் மணல் குவாரி உரிமையாளர் ராமச்சந்திரன் என்பவர் வீட்டில் நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில் சோதனை நடந்தது.
கறம்பக்குடியில் மணல் குவாரி உரிமையாளர் கரிகாலன் என்பவர் வீட்டிலும், ஏம்பல் பகுதியில் மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி தலைமையிலும் போலீசார் சோதனை நடத்தினர்.