தமிழகம் முழுவதும் ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை..!!
டிரைவிங் லைசென்ஸ் எடுக்கவும், வாகன தகுதிச்சான்று பெறவும், தினமும் பல்லாயிரக்கணக்கான பேர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தேடி வருகின்றனர்.
தவெக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஒருங்கிணைந்த முறையில் போலீசார் ரெய்டு நடத்துகின்றனர்.மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் 45 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நடத்தப்படும் இந்த சோதனைகளில் ஏராளமான அலுவலர்கள், ஊழியர்கள், கணக்கில் வராத பணத்துடன் பிடிபட்டுள்ளனர்.
கோவை, காந்திபுரம் மத்திய ஆர்டிஓ அலுவலகம், திருப்பூர் தெற்கு,தென்காசி, நாகர்கோவில், திருநெல்வேலி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கரூர், கும்பகோணம், திருச்சி, செஞ்சி, சேலம் கந்தம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், காரைக்குடி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி உள்ளிட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் மாக்கமூலா பகுதியில் உள்ள போக்குவரத்து துறை பகுதி அலுவலகத்தில், டி.எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். கணக்கில் வராத 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.