#BREAKING வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு
Jul 17, 2026, 18:49 IST
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
புதுக்கோட்டை, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்திவருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.சீர்காழி, அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துரை அதிகாரிகள் நடத்திவருகின்றனர். இதேபோல் அரியலூர் செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திவருகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றுவரும் கையூட்டு ஒழிப்பு ரெய்டு என தகவல்கள் தெரிவிக்கின்றன.