×

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் ஐபிஎஸ் 45 நாட்களில் திடீர் பணியிட மாற்றம்

 

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் ஐபிஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் (DVAC) இயக்குநராகப் பணியாற்றி வந்த அருண் ஐபிஎஸ் (Arun IPS) அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் (TamilNadu Police Academy) புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளார்.  சென்னை பிரஸ் கிளப் நிர்வாகிகளின் ஆதரவாளராக இருந்த தமிழகக் காவல் துறையின் இந்த முக்கிய உயர் அதிகாரி இடமாற்றம், நிர்வாகக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  லஞ்ச ஒழிப்புத்துறையில் பல்வேறு முக்கிய வழக்குகளைக் கையாண்டு வந்த அருண் ஐபிஎஸ், இனி சென்னை ஊனமாஞ்சேரி அகாடமியில் புதிய காவல் அதிகாரிகளுக்கான பயிற்சிகள் மற்றும் அகாடமி நிர்வாகப் பணிகளைக் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. மகேஸ்வரி, இயக்குநர் பொறுப்பை கூடுதலாக சேர்த்து கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.