×

#BREAKING எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன்

 

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 25ஆம் தேதி எ.வ.வேலுவுக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. சோதனையில் ரூ.40 லட்சம் ரொக்கம் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியிருந்தது. ஆனால் இதற்கு எ.வ.வேலு மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) சம்மன் அனுப்பியுள்ளது. 

சாலைகள் சீரமைப்புக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுமார் ரூ.7 கோடியில் ரூ.3.23 கோடி முறைகேடு என புகார் எழுந்தது. எந்த ஒரு பணியும் மேற்கொள்ளாத சங்கரானந்த் இன்ப்ரா நிறுவனத்திற்கு ரூ.3.23 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.