×

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாகீஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் உடைப்பு

அந்தியூர் அருகே 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாகீஸ்வரர் சௌந்தரநாயகி கோவிலில் ஐம்பொன் சிலைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடு போயுள்ளன. தொடர் திருட்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பட்லூர் பகுதியில் பிரசித்தி பெற்ற இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வாசீஸ்வரர் சௌந்தரநாயகி திருக் கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து கருவறையில் உள்ள ஐம்பொன்னாலான வாகீஸ்வரர் சிலை
 

அந்தியூர் அருகே 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாகீஸ்வரர் சௌந்தரநாயகி கோவிலில் ஐம்பொன் சிலைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடு போயுள்ளன. தொடர் திருட்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பட்லூர் பகுதியில் பிரசித்தி பெற்ற இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வாசீஸ்வரர் சௌந்தரநாயகி திருக் கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து கருவறையில் உள்ள ஐம்பொன்னாலான வாகீஸ்வரர் சிலை மற்றும் அங்கிருந்த மேலும் பல சிலைகளை உடைத்துள்ளனர்.

மேலும் ஐம்பொன் சிலையை எடுத்து வந்து கோவிலுக்கு பின்வரும் முட்புதரில் வீசிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து திருக்கோவில் செயல் அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிலில் வைக்கப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவிலில் ஆபரணங்கள் அபிஷேக பொருட்கள் பாத்திரங்கள் திருட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

கோவிலில் தொடர்ந்து கொள்ளை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சிலைகளில் பதிந்துள்ள கைரேகை மாதிரிகள் எடுக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.