இதற்கு பதில் சொல்லுங்க ஸ்டாலின்..!! - சட்டம் ஒழுங்கு சீரழிவு குறித்து நயினார் நாகேந்திரனின் அதிரடி அறிக்கை..!!
அதுமட்டுமல்லாது, தமிழின் பெருமையையும் தமிழ்நாட்டின் அருமையையும் நன்கு உணர்ந்து, உலகெங்கிலும் தமிழ் மண்ணின் புகழைப் பரப்பி வருபவர் நமது பிரதமர் அவர்கள்.
இந்நிலையில், அவர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றிவிடுவார் என எந்தவொரு அடிப்படையுமின்றி புரளியைக் கிளப்புவது தாங்கள் வகிக்கும் பொறுப்பிற்கு அழகல்ல!
திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொல்லி மக்களை நம்ப வைக்கும் கோப்பல்ஸ் தத்துவத்தைக் கையிலெடுத்து மக்களை முட்டாளாக்க நினைக்கும் உங்கள் எண்ணம் இனியும் செல்லுபடியாகாது!
இந்தத் தேர்தலில் உங்களை வீட்டிற்கு அனுப்பத் தமிழக மக்கள் தயாராகவுள்ளனர். தேர்தல் நெருங்கிவிட்டதைக் கருத்தில் கொண்டாவது, தமிழகம் முழுவதும் சுற்றிப் பார்த்து, சீரழிந்துள்ள சட்டம் ஒழுங்கையும், மக்கள் மனதையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்! திசைதிருப்பு நடவடிக்கையை விடுத்து தோல்விக்குத் தயாராகுங்கள் என காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.