×

சென்னையில் மின்சாரம் பாய்ந்து மேலும் ஒருவர் பலி

 

சென்னையில் மின்சாரம் பாய்ந்து மேலும் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மையம் ஃபெஞ்சல் புயலாக மாறி புதுச்சேரி பகுதியில் கரையை கடந்தது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் சென்னை, கடலூர் உள்ளிட்ட கடலோர பகுதி மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கன மற்றும் மிதமான மழை விடிய விடிய பெய்துவருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் அவ்வப்போது தொடர்ந்து விட்டுவிட்டு பெய்து வரும் மிதமான மழையால் பிரதான சாலைகளில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

இந்நிலையில் சென்னை அடுத்த மதுரவாயல் அருகே மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்தார். தனியார் அடுக்குமாடி கட்டிடத்தில் தேங்கிய மழைநீரை அகற்றிய போது விபத்து நேர்ந்தது. ஏற்கனவே மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கீ 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடதக்கது.