தமிழ்நாடு காங்கிரசில் மேலும் ஒரு அதிரடி மாற்றம்!
Jul 8, 2026, 22:02 IST
தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக குலாம் அகமது மீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தேர்தல் முடிவுக்கு அதிரடி நடவடிக்கையாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகைக்கு மாற்றாக எம்.பி. மாணிக்கம் தாகூர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அதனைதொடர்ந்து காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளராக இருந்த கிறிஸ் ஜோடங்கர், கோவா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியின் புதிய மேலிட பொறுப்பாளராக குலாம் அஹ்மத் மீர் நியமிக்கப்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார். குலாம் அஹ்மத் மீர் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவராவார்.