×

மேலும் ஒரு கல்லூரி மாணவன் பலி! அடுத்தடுத்து நடக்கும் சோகம்

 

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லபாக்கத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை, கவனிக்காமல் மிதித்த கல்லூரி மாணவன் வரபிரசாத் (17) மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வாரியத்தின் அலட்சியத்தைக் கண்டித்து, வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தோப்பிற்கு விற்கு வெட்ட சென்றபோது அறுந்துகிடந்த மின்கம்பியை வரபிரசாத் மிதித்ததாக கூறப்படுகிறது.