×

மீண்டும் ஓர் அறிய வாய்ப்பு..! பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 நிதியுதவி..! 

 

தமிழ்நாடு அரசின் அன்பு கரங்கள் திட்டம், ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களில் பெற்றோரை இழந்து, உறவினர்களின் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளின் கல்வி இடைநிற்றலைத் தடுக்க உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 18 வயது வரை மாதம் 2000 ரூபாயச் நிதியுதவி வழங்கப்படும். மேலும், பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, கல்லூரிப் படிப்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

யார் யார் விண்ணப்பிக்கலாம்?

ஆதரவற்ற குழந்தைகள்: பெற்றோர் இருவரையும் இழந்த அல்லது இருவராலும் கைவிடப்பட்ட குழந்தைகள்.

கைவிடப்பட்ட குழந்தைகள்: பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் குழந்தையைக் கைவிட்டுச் சென்றிருந்தால்.

ஆதரவு தேவைப்படும் குழந்தைகள்:

பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ பாதிக்கப்பட்டிருந்தால்.

பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் சிறையில் இருந்தால்.

பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நோயுடன் வாழ்ந்து வந்தால்.

விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்:

இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, பின்வரும் ஆவணங்களின் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்:

குடும்ப அட்டையின் நகல்.

குழந்தையின் ஆதார் அட்டை நகல்.

குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்.

கல்வி மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்.

குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்.

விண்ணப்பிக்கும் முகவரி:

மேற்கண்ட ஆவணங்களுடன், உங்கள் பகுதிகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களிலோ அல்லது நேரடியாக கீழ்க்கண்ட முகவரியிலோ விண்ணப்பிக்கலாம்:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் - சென்னை தெற்கு,
எண்:1, புது தெரு,
பெருநகர சென்னை மாநகராட்சி வணிக வளாகம்,
முதல் தளம் (RTO அலுவலகம் எதிரில்),
ஆலந்தூர், சென்னை - 600016.