×

தேனி மாவட்டத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேனியில் கடந்த 8 ஆம் தேதியிலிருந்து வரும் 15 ஆம் தேதி வரை முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மளிகை, அத்தியாவசிய கடைகள் திறக்க கூடாது என்றும் மருந்தகங்கள் திறக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிலும் மருந்தகங்களில் வேறு பொருட்களை
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேனியில் கடந்த 8 ஆம் தேதியிலிருந்து வரும் 15 ஆம் தேதி வரை முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மளிகை, அத்தியாவசிய கடைகள் திறக்க கூடாது என்றும் மருந்தகங்கள் திறக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிலும் மருந்தகங்களில் வேறு பொருட்களை விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,489ஆக உயர்ந்துள்ளது.