×

முழு ஊரடங்கு எதிரொலி : நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது!

 

தமிழ்நாட்டு கொரோனா  நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.  தற்போது நாட்டில் கொரோனா  வைரஸ் நோய் தொற்று பரவ அதிகரித்து வரும் சூழ்நிலையில்,  பொதுமக்கள் நலன் கருதி தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த 16 ஆம் தேதி அன்று ,  நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்.  தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளின் நலன் கருதி சென்னை சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள் செயலிகள் மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும்.  வாடகை கார்கள் பயணிகளை ஏற்றி செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பால், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் சேவைக்கு அனுமதி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப் படுவதால் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.  இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன்,  மதுபான கடைகள் மற்றும் மதுபான பார்கள் முழு ஊரடங்கு காரணமாக மூடப்படும் என்று தெரிவித்துள்ளார்.  ஜனவரி மாதத்தில் கடந்த 9ஆம் தேதியிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில்,  கடந்த 9 மற்றும் 11ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.