×

பாமகவுக்கு தூண்டில் விடும் தவெக! அதுக்குன்னு ரூ.15 லட்சமா?

 

தவெக அரசு பொறுப்பேற்றதும் தகைசால் தமிழர் விருது தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமிக்கு அறிவிக்கப்படவிருக்கிறது.


தவெக அரசு பொறுப்பேற்றதும் தகைசால் தமிழர் விருது தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமிக்கு அறிவிக்கப்படவிருக்கிறது. இவர் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணியின் தந்தை ஆவார். இவர் பாமக தலைவர் அன்புமணியின் மாமனார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதற்கு ஏற்ப காங்கிரசையும் குளிர்விக்கவும் பாமக உடன் நெருக்கத்தை ஏற்படுத்தவும் இந்த  விருது வழங்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. எனினும் நீண்ட கால அரசியல் தலைவரான கிருஷ்ணசாமிக்கு  இந்த விருது வழங்கப்பட்டிருப்பதை நாம் அனைவரும்  பாராட்டுவோம்.. 

இதுவரை தகைசால் தமிழர் விருது சங்கரய்யா, நல்லகண்ணு, குமரி அனந்தன், வீரமணி, காதர் மொய்தீன் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தகைசால் தமிழர் விருது என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழ் இனத்தின் மேம்பாட்டிற்கும் பாடுபட்ட பெருமக்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். இந்த விருதுடன் பாராட்டுச் சான்றிதழும் ரூ. 15,00,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.