☰
×

பொங்கலுக்கு அண்ணன் சீர் திட்டம் வருகிறது... 

 

தமிழக வெற்றிக் கழக அரசின் முதல்வர் விஜய் தனது முதல் மிகப்பெரிய மக்கள் நல திட்டத்தை அறிவித்துள்ளார். அது தான் 'அண்ணன் சீர்' திட்டம்.

தங்கத்திற்கான டெண்டர்  7.12.2026 அன்றும், பட்டுப்புடவைக்கு 8.12.2026 அன்றும் திறக்கப்பட உள்ளது. அதாவது டிசம்பர் மாதமே பணிகள் தொடங்கி, பொங்கலுக்குள் மக்களுக்கு வழங்க முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

முதல்வராக பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, "என் தமிழகத்தில் எந்த ஒரு பெண்ணின் திருமணமும் பணத்திற்காக நின்றுவிடக்கூடாது, அவர்களுக்கு அண்ணனாக நான் இருக்கிறேன்" என சொன்ன முதல்வர் விஜய், அதை செயலிலும் காட்டிவிட்டார். கல்வி, மருத்துவத்திற்கு அடுத்து, குடும்ப நலத்தில் அவர் காட்டும் அக்கறைக்கு தமிழகமே பாராட்டி வருகிறது. இந்த திட்டம் தான் வரும் 2027 பொங்கல் பரிசாக இருக்கும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் திருமண சீராக அண்ணனே நேரில் வந்து செய்யுற மாதிரி... 8 கிராம் தங்க நாணயம் (22 காரட் தூய தங்கம்) - 60,000 எண்ணிக்கை, ஒரு பட்டுப்புடவை (Silk Saree). இன்றைய தங்க விலைப்படி பார்த்தால் 8 கிராம் தங்கத்தின் மதிப்பே ரூ.70,000-த்தை தாண்டும், பட்டுப்புடவை ரூ.15,000-20,000 மதிப்புள்ளது. ஆக ஒரு குடும்பத்துக்கு கிட்டத்தட்ட ரூ.90,000 மதிப்புள்ள சீரை அரசே செய்கிறது.

இதற்கு முன் திமுக ஆட்சியில் மூவலூர் ராமாமிர்தம் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் என இருந்தது. ஆனால் பல குளறுபடிகளால் பணம் தான் கொடுத்தார்கள், தங்கம் சரியாக கிடைக்கவில்லை என புகார் இருந்தது. முதல்வர் விஜய் அதை மாற்றி, 'அண்ணன் சீர்' என்ற பெயரில் நேரடியாக தங்க நாணயமாகவும், பட்டுப்புடவையாகவும் கொடுக்க உத்தரவிட்டுள்ளார். இதனால் ஏழை, BC, MBC, SC/ST பெண்களின் திருமண சுமை குறையும்.