அண்ணாமலை நடைபயணம் - விஜயகாந்த் வாழ்த்து!!
Jul 28, 2023, 11:28 IST
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் பாஜக கட்சியை பலப்படுத்தும் நோக்குடன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று நடை பயணம் மேற்கொள்கிறார். என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தை ராமேஸ்வரத்தில் இருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.
இதுக்குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார். அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். மாநில துணை செயலாளர் திரு.கரு. நாகராஜன் நேரடியாக வந்து அழைப்பிதழை வழங்கினார்.