×

அண்ணாமலை நடைபயணம் : தேமுதிகவுக்கு அழைப்பு

 

அண்ணாமலை நடைபயணத்திற்கு தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து 28ஆம் தேதி 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் 110 நாட்கள் பாதயாத்திரையை தொடங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ளும் நிலையில், நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலையின் பாத யாத்திரை தொடக்க விழாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்,  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  ஜி கே வாசன் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவை பாஜக சார்பில் இன்று சந்தித்த கட்சியின் மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் பாதயாத்திரையில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கூட்டத்திற்கு தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்காத நிலையில்,  தற்போது அண்ணாமலையின் பாத யாத்திரைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.