×

சரத்குமார் பிறந்தநாள் - அண்ணாமலை வாழ்த்து

 

சரத்குமார் பிறந்தநாளையொட்டி அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சுற்றும் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகர் சரத்குமார் இன்று தனது 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 1986 ஆம் ஆண்டு தெலுங்கில் அறிமுகமான இவர் தமிழ் சினிமாவில் புலன் விசாரணை படத்தில் வில்லனாக நடித்தார்.  இதன் பிறகு துணை கதாபாத்திரங்கள்,  கௌரவ கதாபாத்திரங்கள் நடித்து வந்த அவர் சேரன் பாண்டியன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.  இதையடுத்து சூரியன் ,சூரிய வம்சம், நாட்டாமை, நட்புக்காக, ஜானகிராமன், ஐயா ,மாயி ,அரசு உள்ளிட்ட பல படங்களில் சரத்குமார் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவை தாண்டி அரசியலிலும் தடம்படித்த பதித்த இவர், திமுகவின் சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வந்துள்ளார். தற்போது சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி தொடர்ந்து அரசியலில் இயங்கி வருகிறார்.


இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் சிறந்த நடிகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளருமான அண்ணன் திரு.சரத்குமார் அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அண்ணன் திரு சரத்குமார் அவர்கள், நீண்ட ஆயுளுடன், நல்ல உடல்நலத்துடன், தமது கலைப்பணி மற்றும் மக்கள் பணியைத் தொடர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.