நடிகர் அஜித்துக்கு அண்ணாமலை வாழ்த்து
நடிகர் அஜித்குமாரின் 53ஆவது பிறந்தநாளையொட்டி அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமாரின் 53 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது . அஜித்குமாரின் பிறந்த நாளை ஒட்டி அவர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன தீனா திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 23 ஆண்டுகளுக்கு பின்னர் தீனா திரைப்படம் டிஜிட்டல் முறையில் ரீலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று படம் வெளியாகி உள்ளது. இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், தன்னம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு, எளிய பின்புலத்தில் இருந்து வந்து, தனது திறமையால் மக்களைக் கவர்ந்து, திரையுலகின் முக்கிய அடையாளங்களில் ஒருவராக உயர்ந்திருக்கும், நடிகர், சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.