×

இலங்கை சென்றார் அண்ணாமலை..!

 

பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, தனிப்பட்ட பயணமாக நேற்று இலங்கை சென்றார்.

இதற்காக சென்னை விமான நிலையம் வந்தவரி டம் கேட்டதற்கு, ''ஒவ்வொரு முறை நான் வரும் போதும் பேட்டி கேட்கிறீர்கள். நான் கொடுத்துக் கொண்டே இருக்க முடியுமா? உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்,'' என்றார். தனிப்பட்ட பயணமாக, குடும்பத்துடன் இலங்கை சென்றுள்ள அவர், அக்., 1ல் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.