அம்பேத்கரின் சமத்துவ நோக்கங்கள் அனைத்தும் நிறைவேற உழைப்போம் - அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தலைவர்கள் பலரும் அம்பேத்கருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேபோல் தலைவர்கள் பலரும் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அரசியல் அமைப்பின் தலைமைச் சிற்பி, சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அண்ணல் அம்பேத்கர் அவர்களது நினைவு தினம் இன்று. நாட்டின் மிகப்பெரும் சமூக சீர்திருத்தவாதியான அண்ணல் அம்பேத்கர் அவர்களது சமத்துவ நோக்கங்கள் அனைத்தும் நிறைவேற உழைப்போம். சகோதரத்துவம் காப்போம். ஜெய் பீம் என குறிப்பிட்டுள்ளார்.