பொள்ளாச்சியில் ஜூலை 12-ல் முதல் மாநாடு - அண்ணாமலை..!!
பொள்ளாச்சியில் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு நடைபெறவுள்ளது என அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.
பா.ஜ.க-வில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி ‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders) என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ள அண்ணாமலை, அதன் முதல் மாநாட்டை நடத்தத் தயாராகி வருகிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் ஜூலை மாதம் 12-ஆம் தேதி பொள்ளாச்சியில் தங்களது ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் முதலாவது பிரம்மாண்ட மாநாடு நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
புதிய அமைப்பைத் தோற்றுவித்த பிறகு அண்ணாமலை முன்னெடுக்கும் முதல் மாநாடு இது என்பதால், அவரது அரசியல் நகர்வுகளில் இந்த நிகழ்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் 'வீ த லீடர்ஸ்' என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கினார். இதனை தொடர்ந்து, தமிழக பாஜகவின் முன்னணி நிர்வாகிகள் பலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தங்களது ஆதரவாளர்களுடன் இந்த புதிய இயக்கத்தில் இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது