×

தமிழக பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்கிறார் அண்ணாமலை

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை கமலாலயத்தில் இன்று பொறுப்பேற்கிறார். பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையை பாஜக தலைமை நியமித்தது.இந்தநிலையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறுகிறது. கடந்த 14 ஆம் தேதி காலை 9.30
 

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை கமலாலயத்தில் இன்று பொறுப்பேற்கிறார்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையை பாஜக தலைமை நியமித்தது.இந்தநிலையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறுகிறது.

கடந்த 14 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு பல்லடம், திருப்பூர், பெருந்துறை, ஈரோடு, சங்ககிரி, சேலம், நாமக்கல், பரமத்தில் வேலூர், கரூர், குளித்தலை வழியாக திருச்சி வந்தடைந்த அண்ணாமலை நேற்று காலை திருச்சி, பெரம்பலூர், தொழுதூர் சந்திப்பு, வேப்பூர் சந்திப்பு, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், மேல்மருவத்தூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம் வந்தடைந்தார்.

இன்று தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், சைதாப்பேட்டை வழியாக சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்துக்கு வருகை புரியும் அண்ணாமலை மதியம் 1.45 மணிக்கு கமலாலயத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.