“கேசவ விநாயகம் அரசியல்வாதி இல்லை... அவர் வேலை முடிஞ்சிட்டு”- அண்ணாமலை
விருதுநகரில் ரூ.10,242 கோடி மதிப்பீட்டில் பிரதமரின் மித்ரா டெக்ஸ்டைல் பார்க் திட்டம் அமைய உள்ளதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “விருதுநகரில் ரூ.10,242 கோடி மதிப்பீட்டில் பிரதமரின் மித்ரா டெக்ஸ்டைல் பார்க் திட்டம் அமைய உள்ளது. திருப்பூர் வளரும்போது, பொருளாதாரம் பெருகும். திருப்பூர் பிராண்ட் எல்லாம் சர்வதேச பிராண்டாக மாறும். தமிழ்நாடு பாஜகவின் பூத் கமிட்டிகளை ஒருங்கிணைக்கும் சக்தி கேந்திராவின் தலைவராக என்னை நியமிக்கவில்லை. தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுடன் பனிப்போர் இல்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் இப்போது பதில் அளிக்க முடியாது. தேர்தலுக்கு நிறைய நாட்கள் உள்ளதால் பொறுமையாக இருங்கள் அனைத்து கேள்விகளுக்கும் அடுத்தடுத்து பதில் அளிக்கிறேன். பொறுப்பு முக்கியம் இல்லை, வியூகம் தான் முக்கியம்.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை முதல்வர் பார்வையிடாதது ஏன்? எய்ம்ஸ் மருத்துவமனை அமையக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வளவு தாமதங்களையும் செய்தார். மாநில அரசின் எந்த ஒத்துழைப்பும் இன்றி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுவருகிறது. எத்தனையோ முறை மதுரைக்கு சென்ற முதல்வர் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டிருக்கலாமே? மரங்களை வெட்டவோ, நிலம் கையகம்படுத்தும் பணிக்கோ எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கால தாமதத்திற்கு திமுகஅரசு தான் காரணம்.கேசவ விநாயகம் அரசியல்வாதி இல்லை. கேசவ விநாயகத்தின் வேலை முடிந்துவிட்டது. கேசவ விநாயகத்துக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இல்லை.பல உலக நாடுகளை ஒப்பிடும் போது நமது இந்தியாவுக்கு 18% Tariff என்பது பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கிடைத்த வெற்றி” என்றார்.