தலைசிறந்த தேசியவாதியான சிவாஜி கணேசனின் புகழை போற்றி வணங்குகிறேன் - அண்ணாமலை
Jul 21, 2023, 11:13 IST
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் இன்று. இதனையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திரைப்படங்களில், நடிப்புக்கு இலக்கணம் வகுத்த பல்கலைக்கழகம், சிம்மக் குரலோன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நினைவு தினம் இன்று.