தாணுலிங்க நாடார் பிறந்த தினம் இன்று - அண்ணாமலை புகழாரம்
Feb 17, 2024, 12:06 IST
ஐயா தாணுலிங்க நாடார் அவர்களின் புகழை போற்றி வணங்குகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், சுதந்திரப் போராட்ட வீரரும், கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைப்பதற்கு முன்னின்று போராடியவர்களில் ஒருவருமான ஐயா தாணுலிங்க நாடார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
நாடாளுன்ற உறுப்பினராகவும், இந்து முன்னணி இயக்கத்தின் முதல் மாநிலத் தலைவராகவும் அவர் மேற்கொண்ட கல்விப் பணிகளும், ஆன்மீகப் பணிகளும், சமூகப் பணிகளும் என்றும் அவரது பெருமையைக் கூறும்.
@BJP4TamilNadu சார்பாக அவரது புகழை போற்றி வணங்குகிறோம்.என்று குறிப்பிட்டுள்ளார்.