கோவை கக்குராயன் மலை மலை பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!
Apr 3, 2026, 14:14 IST
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், சிறுத்தை பிடிக்கப்படாமல் இருப்பது, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும், தேர்தல் நேரம் என்பதற்காக, பொதுமக்களை ஆபத்தில் விட்டுவிடக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
தமிழக வனத்துறை, உடனடியாக விஞ்ஞானபூர்வமான தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, பாதுகாப்பு வலை அமைத்து, சிறுத்தையைப் பிடித்து, பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.