சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தர்மன் வெற்றி - அண்ணாமலை வாழ்த்து!
Sep 2, 2023, 10:45 IST
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சிங்கப்பூர் அதிபர் தேர்தலில், யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாக கொண்ட, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் அவர்கள் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். உலக அரங்கில், தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைத்துள்ள மற்றொரு பெருமையான நிகழ்வாகும்.