எல். முருகனுக்கு அண்ணாமலை வாழ்த்து!!
மக்களவை தேர்தலில், நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்ட நிலையில், மத்தியப்பிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாகிறார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி., ஆனார். தற்போது மத்திய செய்தி ஒளி பரப்பு துறை இணை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். அவரது பதவி காலமானது வருகிற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடை உள்ளது . இந்த சூழலில் அவர் மீண்டும் ராஜ்யசபா வேட்பாளராக மத்திய பிரதேசத்தில் போட்டியிடுவார் என்று பாஜக தலைமை அறிவித்துள்ளது .
இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், மாண்புமிகு மத்திய இணையமைச்சர், அண்ணன் திரு @Murugan_MoS அவர்களை, இரண்டாவது முறையாகப் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து, தமிழகத்துக்கு பெருமை சேர்த்திருக்கும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi
அவர்களுக்கும், @BJP4India தேசியத் தலைவர் திரு @JPNadda அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு
@AmitShah அவர்களுக்கும், @BJP4India தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் திரு @blsanthosh
அவர்களுக்கும், @BJP4Tamilnaduசார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.