×

பொதுமக்களுக்கு ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை வழங்கினார் அண்ணாமலை

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடியின் அறிவுரையின் படி தனது தெருவில் வசிக்கும் மக்களுக்கு ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை வழங்கினார். 

அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், பாரதத்தின் ஆன்மீக கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கவிருக்கும் அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் ஜனவரி 22 அன்று நடைபெறவிருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, வரும் 22ம் தேதி அன்று நமது பிரதமர் கரங்களால் திறந்து வைக்கப்பட  உள்ளது. பகவான் ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம், பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளிப் பண்டிகையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள், அன்றைய தினம் நாட்டு மக்கள் அனைவர் இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடக் கேட்டுக்கொண்டுள்ளார்.