விஜயகாந்த் பிறந்தநாள் - தினகரன் , அண்ணாமலை வாழ்த்து
Aug 25, 2023, 10:59 IST
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி அண்ணாமலை, தினகரன் உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று 71வது பிறந்தநாள் காணும் தே.மு.தி.க. நிறுவன தலைவர் அன்பு நண்பர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் மக்கள் பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.