கு.க.செல்வம் மறைவு - அண்ணாமலை இரங்கல்
Jan 3, 2024, 14:09 IST
திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் மறைவையொட்டி அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருந்தார் கு.க.செல்வம். கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக மீதான அதிருப்தி காரணமாக கு.க.செல்வம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பின்னர் 2022 ஆம் ஆண்டு மீண்டும் திமுகவில் இணைந்தார் கு.க.செல்வம். அவருக்கு திமுகவில் தலைமை நிலைய செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது. உடல்நலக்குறைவால் போரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கு.க.செல்வம் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி! என்று குறிப்பிட்டுள்ளார்.