×

முன்னாள் அமைச்சர் துரை.ராமசாமி மறைவு - அண்ணாமலை இரங்கல்!

 

தமிழக முன்னாள் அமைச்சர் துரை.ராமசாமி உடல்நலக்குறைவால் காலமான நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழக முன்னாள் அமைச்சரும், ஐந்து முறை வெள்ளக்கோவில் சட்டமன்ற உறுப்பினர், 10 ஆண்டுகள் வெள்ளக்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் என மக்கள் பணிகளில் சிறந்து விளங்கியவருமான, ஐயா துரை. ராமசாமி அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா இறைவனடி சேர வேண்டிக் கொள்கிறேன்.