அத்திப்பள்ளி பட்டாசு விபத்து - அண்ணாமலை இரங்கல்
Oct 8, 2023, 12:13 IST
அத்திப்பள்ளி பட்டாசு விபத்து சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 14 தமிழர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அத்திப்பள்ளி பட்டாசு விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.